Princiya Dixci / 2016 ஜூலை 05 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட வீர மரக்குற்றிகளை, மாட்டு வண்டில்களில் ஏற்றி வந்த சம்பூர் 05ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடைய இருவரை சம்பூர் பொலிஸார் கைதுசெய்து, நேற்று திங்கட்கிழமை (04) மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து இருவரும், தலா 2 சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதோடு, இம்மாதம் 14ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்தோடு, மாட்டு வண்டில்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் நீதிபதி, பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் குறித்த காட்டுப் பகுதியைச் சோதனையிட்ட போது மாட்டு வண்டில் சொந்தக்காரர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
50 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
21 Mar 2026