Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 31 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
அறநெறிபாடசாலை இந்து ஆலயங்களுக்கு அரசாங்த்தினால் வழக்கபடும் நிதி அதிகரிக்கப்படல் போன்ற விடயங்கள் உள்ளடங்கிய மனுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்ததாக, மூதூர் இந்து குருமார் சங்கத்தின் தலைவர் இ.பாஸ்கரன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற, மூதூர் மாவட்ட நீதிமன்ற கட்டடத் திறப்பு விழாவின் போது ஜனாதிபதியைச் சந்தித்து, மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் சார்பாவே குறித்த மகஜnர் கையளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அறநெறிபாடசாலை இந்து ஆலயங்களுக்கு அரசாங்கத்தினால் வழக்கபடும் நிதி அதிகரிக்கப்பட வேண்டும். முக்கியமாக, போரினால் பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நிரந்தர மாதாந்தக் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும்.
பாடசாலைக் குறைபாடுகள், தாய், தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான விசேட உதவிகள், மூதூர் பகுதியில் உள்ள சில கிராமங்களின் வீதிகளின் செப்பனிடவேண்டியுள்ளமை போன்ற விடயங்கள் அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக மூதூர் பிரதேச இந்து குருமார் சங்க தலைவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago