Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூன் 24 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, மூதூர் கிழக்கின் சில கிராம அலுவலர் பிரிவுகளில் பொதுமக்களின் காணிகளுக்கு வனவளத் திணைக்களத்தால் எல்லைக்கல் நடுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன், இடப்பெயர்வின் பின் மீள்திரும்பிய காணி உரிமையாளர்கள் தங்களின் காணிகளில் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவிடமே நேற்று வியாழக்கிழமை கடிதம் மூலம் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன், 'அரை நூற்றாண்டுக்கும் மேலாக பட்டியடிக்குடா, புறவன்பாஞ்சான் தங்கபுரம், கணேசபுரம் உள்ளிட்ட இடங்களில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுவந்த மக்கள், 2006ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து விவசாயச் செய்கையில் ஈடுபடாமல் இருந்துள்ளனர்.
மீண்டும் தங்களின் இடங்களுக்குத் திரும்பிய அம்மக்கள், தங்களின் காணிகளில் காணப்பட்ட பற்றைகளை வெட்டி அகற்றி விவசாயச் செய்கையை ஆரம்பிக்க முற்பட்டபோது, அக்காணிகளில் உள்ள மரங்களையும் புதர்களையும் துப்புரவு செய்ய வேண்டாம் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எனவே, இக்காணிகளில் உள்ள பற்றைகளை அகற்றுவதற்காக வனவளத் திணைக்களத்தில் அனுமதி பெற முயற்சிக்கும் வேளையில், இவர்களுடைய காணிகளை அரச காணிகளான எண்ணி அதற்கு வனவளத் திணைக்களம் எல்லைக்கல் நட்டுள்ளது' என்றார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago