Princiya Dixci / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, சேருவிலப் பிரதேசத்தில் உழவு இயந்திரமொன்றில் அனுமதிப்பத்திரமின்றி 24 முதிரை மரக்குற்றிகளைக் கொண்டு சென்ற இருவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு கைதுசெய்துள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 48 மற்றும் 37 வயதுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பயன்படுத்திய உழவு இயந்திரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள், சேருவிலப் பகுதியில் இருந்து சீனக்குடாப் பகுதிக்குச் கொண்டு சென்ற போது கைதுசெய்யப்பட்டதாகவும் சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
9 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
37 minute ago