2025 மே 21, புதன்கிழமை

முதிரை மரக்குற்றிகள் வெட்டிய மூவர் கைது

Princiya Dixci   / 2016 மே 24 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, கும்புறுபிட்டி காட்டுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் முதிரை மரக்குற்றிகளை வெட்டிய மூவரை, இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை 11.30க்கு குச்சவெளிப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

குச்சவெளி, கும்புறுப்பிட்டி-04ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 26, 28 மற்றும் 31 சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களிடமிருந்து 40 முதிரை மரக்குற்றிகளும் சிறிய ரக உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டதாகவும் குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .