Thipaan / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தின மூதூர் பஹ்ரியா நகர் வட்டம், கடற்கரை வீதி ஆகியவற்றில், மின் வடங்கள் தொய்ந்து காணப்படுவதால், தாம் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வடங்கள், மின்கம்பத்தில் இருந்து நீண்ட காலமாக தொய்ந்து காணப்படுவதுடன், வீதியோரங்களிலுள்ள மரக்கிளைகளுடனும் இணைந்து கம்பிகள் செல்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வடங்கள், வீதியால் செல்லும் வாகனங்களில் சிக்கி அறுந்து விடக் கூடிய நிலைமை காணப்படுவதாகவும், தாம் அச்சத்துனேயே வீதியால் பயணிப்பதாகவும் தெரிவித்த மக்கள், இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினர்.
இது தொடர்பில், இலங்கை மின்சார சபையின் பிராந்திய காரியாலயத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த பிரதேசங்களிலிருந்து முறைப்பாடுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லையெனவும், தாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர்.


7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026