எப். முபாரக் / 2019 மார்ச் 21 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை – கந்தளாய், ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து யானைத் தாக்குதலுக்குள்ளான நபரொருவர், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.
விறகு எடுப்பதற்காக காட்டுக்குள் இருவர் சென்ற போது, அங்கு ஒளிந்திருந்த காட்டு யானையொன்று தாக்கியதாக, பாதிக்கப்பட்டவர், பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
வான்எல பகுதியைச் சேர்ந்த ஹேரத் நிஸாந்த 39 வயதுடைய ஒருவரே, இன்று (21) காலை மேற்படிச் சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இப்பிரதேசத்தில் கடந்த வாரமும் காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் காட்டுக்குள் விறகு எடுக்கச் செல்ல வேண்டாமெனவும், ஜயந்திபுர பொலிஸார், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago