Editorial / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ், தீஷான் அஹமட்
கொழும்பிலிருந்து கிண்ணியா மற்றும் மூதூர் பயணிகளை ஏற்றிச் சென்ற வானொன்று, யானையுடன் மோதி விபத்துக்குள்ளானதில், கிண்ணியாவைச் சேர்ந்த ஒருவர் ஸ்தலத்தியே பலியானதுடன், பலர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து, ஹபரனை காட்டுப் பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில், கிண்ணியா – சூரங்கல், கற்குழிப் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட நபீட் என்பவரே உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து யாருமில்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் இடம்பெற்றதால் விரைவில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனதுடன், கொழும்பிலிருந்து மட்டக்களப்புச் செல்லும் பஸ்களில் பயணித்தவர்களால் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .