Suganthini Ratnam / 2016 ஜனவரி 21 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
காட்டு யானைகளின் தொல்லைகள் தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் மூலம் கோமரங்கடவெல பொலிஸ் நிலையத்துக்கு அதிகளவில் முறைப்பாடுகள் கிடைப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டு யானைகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் கோமரங்கடவெல பிரதேசத்திலுள்ள மக்கள் பீதியடைந்து முறைப்பாடு செய்கின்றனர்.
அம்முறைப்பாடுகள் தமக்கு கிடைத்தவுடன் ஒரே இரவில் பல பகுதிகளுக்குச் சென்று யானைகளின் நடமாட்டத்தை அவதானிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கோமரங்கடவெல பிரதேச செயலாளர் எஸ்.எம்.சி.சமரகோனிடம் வினவியபோது, 'கடந்த வருடத்தை விடவும் தொல்லைகள் குறைவாக காணப்படுவதாகவும் இவ்வருட அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் மின்வேலி அமைப்பதற்கு கோமரங்கடவெல மற்றும் கிவ்லகடவெல பகுதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன' என்றார்.
8 minute ago
16 minute ago
25 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
25 minute ago
37 minute ago