Thipaan / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்
திருகோணமலை, பதவிசிறிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்ஹபுர பகுதியிலுள்ள வயலில் காவலில் ஈடுபட்டிருந்த காவலாளியொருவர், யானைத் தாக்குதலுக்குள்ளாகி, இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை (13) உயிரிழந்துள்ளார் என, பதவிசிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
பதவிசிறிபுர, சிங்ஹபுர 13ஐச் சேர்ந்த பீ. ரோஹன ராஜபக்ஷ (45 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
சிங்ஹபுர பிரதேசத்திலுள்ள வயலுக்கு காவலுக்குச் சென்ற இருவரில் ஒருவர் மேற்பகுதியில் கட்டப்பட்டிருந்த பரணில் உறங்கியுள்ளார். மற்றவர் பரணுக்குக் கீழே உறங்கியுள்ளார்.
மேலே உறங்கிக் கொண்டிருந்த நபர், பரண் அசைவதை உணர்ந்து, கீழே பார்த்தபோது, கீழே உறங்கிக் கொண்டிருந்தவரை யானை தாக்குவதைக் கண்டுள்ளார்.
அதனையடுத்து, அலைபேசியூடாக, பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பை ஏற்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் யானையை விரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலத்தை, நீதவான் பார்வையிட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பதவிசிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025