Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட அரச நியமனங்களில் ரொட்டவெவ கிராம இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனரென, அவ்விளைஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் நடை பெற்ற காலப்பகுதியிலும் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போதும் அரசியல்வாதிகளால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள், இன்னும் நிறைவேற்றப்படவில்லையெனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவில் அரச வைத்தியசாலைகள், ஆயுர் வேத வைத்தியசாலைகள், மிருக வைத்தியசாலை, நீர்ப்பாசனத் திணைக்களங்கள், கமநல சேவைகள் திணைக்களங்கள், பாடசாலைகள்,
பொது நூலகங்கள், தபால் கந்தோர் போன்ற அரச அலுவலகங்கள் இருக்கின்ற போதிலும் அதில் காணப்பட்ட சில வெற்றிடங்களுக்காக, வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இளைஞர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ரொட்டவெவ கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி தகைமையுடைய இளைஞர்கள் தொழிலின்றி திண்டாடும் வேளை, மொறவெவ பிரதேசத்தில் காணப்படுகின்ற அரச காரியாலங்களுக்கு சிற்றூழியர் பதவிகளுக்கு கூட தூர இடங்களில் உள்ளவர்களுக்கே நியமனம் வழங்கப்பட்டு வருகின்றது எனவும் இளைஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
3 hours ago
5 hours ago