2026 மார்ச் 21, சனிக்கிழமை

ரூ. 20 இலட்சம் பெறுமதியான வலைகள் மீட்பு

Thipaan   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, பொன்ஆனந்தம்

மூதூர் பிரதேசத்திலுள்ள இலங்கைத்துறை முதுகத்துவாரம் பகுதியில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்ட விரோத மீன்பிடி வலைகளை, நேற்றுப் புதன்கிழமை (12) மீட்டுள்ளதாக, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்  கைப்பற்றியுள்ளதாகவும் மீட்கப்பட்ட வலைகளை திருகோணமலை கடற்றொழில் திணைக்களத்துக்;கு கொண்டு வந்துள்ளதாகவும் அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் சட்ட விரோத முறையில் மீன்பிடிப்பதாக நாளுக்கு நாள் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்தன.

அந்த முறைப்பாடுகள் தொடர்பில், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X