2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ரி 56 ரக துப்பாக்கி மீட்பு

Thipaan   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதூர்தீன் சியானா

திருகோணமலை, வேலுர் கடற்கரைப்பகுதியில் கடற்கரைகளில் காணப்படுகின்ற குப்பைகளைப் புதைப்பதற்காக சனிக்கிழமை (08) மாலை குழியொன்றைத் தோண்டியபோது, ரி 56 துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள் வழங்கிய தகவலையடுத்து அங்கு விரைந்த நிலாவெளிப் பொலிஸார் இத்துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்ற இத்துப்பாக்கி, யுத்த காலத்தின் போது புதைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுவதுடன், அது தற்போது நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X