எப். முபாரக் / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில், பத்து போத்தல் வடிசாராயத்தினை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை இம்மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க நேற்று (2) உத்தரவிட்டார்.
கந்தளாய், அக்போ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை கந்தலாய் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியப் போது, நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கந்தலாய் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .