2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வடிசாராயம் காய்த்த இருவர் கைது

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 28 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, அக்போபுர பகுதியில், சட்டவிரோதமான முறையில் வடிசாராயம் காய்த்த இருவரை அக்போபுர பொலிஸார் நேற்று(27) கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் அக்போபுர,மற்றும் வட்டுக்கச்சி பகுதியைச் சேர்ந்த 43,மற்றும் 30 வயதுடைய நபர்களையே, பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

​மேலும், வடிசாராயம் காய்ப்பதற்காகப் பயன்படுத்திய  நான்கு பரல்கள்,பதினைந்து கோடா பைக்கற்றுகள் மற்றும் இரண்டு மூடைச் சீனி போன்றவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், அக்போபுர பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X