எப். முபாரக் / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சேருநுவரவில் அனுமதிப்பத்திரமின்றி நான்கு போத்தல் வடிசாராயம் வைத்திருந்த நபரொருவருக்கு, 20,000 ரூபாய் அபராம் செலுத்துமாறும் அத்தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு வருடம் சிறைதண்டனை விதித்து, மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், இன்று (09) உத்தரவிட்டார்.
சமகிபுர, தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் வடிசாராயம் விற்பனை செய்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போது, நேற்று மாலை கைதுசெய்யப்பட்டாரென சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .