Mayu / 2025 ஜனவரி 08 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கீதபொன்கலன், அ . அச்சுதன்
திருகோணமலை,வெருகல் பிரதேச செயலகப்பிரிவின் வட்டவான் பகுதியில்,திங்களன்று(06)திடீரென தொல்லியல் திணைக்களத்தால் நடப்பட்ட " வட்டவான் தொல்லியல் நிலையம்" என்ற பெயர் பலகைக்கு ஆட்சேபம் தெரிவித்து,வெருகல் பிரதேச செயலகத்தின் முன்பாக புதன்கிழமை(08) பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வெருகல் பிரதேச செயலக பிரிவின்,திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வட்டவான் பிரதேசத்திற்கு ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மலைப்பகுதி இவ்வாறு திடீர் என தொல்லியல் பகுதியாக பெயரிடப்பட்டுள்ளது.
இவ் மலைப்பகுதியை சூழவுள்ள 160 ஏக்கர் நிலத்தில்,164 குடும்பங்களை சேர்ந்த விவசாயிகள் நீண்ட காலமாக பயிர்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு,பொது மக்களின் விவசாய நிலங்கள் விகாரைகளுக்கு உரியது என்று சர்சைகள் ஏற்படுத்தப்பட்டது.இவ்வாறு இங்கும் தமது விவசாய நிலங்கள் அபகரிக்கப்படலாம் என பிரதேச மக்கள் கருதுகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago