2025 மே 05, திங்கட்கிழமை

வருமான வரி தொடர்பான கருத்தரங்கு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 20 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருமான வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு, மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில், எதிர்வரும் 25ஆம் திகதி காலை 09 மணி தொடக்கம் 12 மணிவரை  நடைபெறவுள்ளதாக, உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் தம்புள்ளை பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

மூதூர்,  கிண்ணியா பிரதேசங்களில்  வருமான வரி செலுத்துவோர், வருமான வரி செலுத்துவதற்கான ஆர்வமுள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்  விதத்தில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அலுவலகம்  தெரிவித்துள்ளது.

புதிய வரிச்சட்டத்தின் மீதான விழிப்புணர்வு, வரி ஆவணத்தை பராமரிப்பதன் முக்கியத்துவம்  போன்ற வரி செலுத்துவோருக்கு மிகவும் முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக தமிழ்மொழி மூலம் அறிவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளது.

இதேவேளை, வரி செலுத்துவோரின் பிரச்சினைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X