2025 மே 14, புதன்கிழமை

வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல்

Editorial   / 2017 ஜூலை 29 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம்

ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையும், மீண்டும் 14 - 18ஆம் திகதி வரையுமான காலப்பகுதிகளில், கந்தளாய் பிரதேச செயலக வளாகத்தில் காலை 8.30 முதல் 1.30 மணிவரை, கடைகள் பலநோக்கு கூட்டுறவு சங்கம் கமநலசேவை திணைக்களம் மற்றும் வங்கிகளில் உபயோகிக்கும் சகல அளவை நிறுவை உபகரணங்களையும் பரிசோதித்து முத்திரையிட, சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆகவே, குறித்த திகதிகளில் உபகரணங்களைச் சமர்ப்பித்து முத்திரையிட்டுக் கொள்ளுமாறு, சகல வர்த்தகர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தவறும்பட்சத்தில், அளவைகள் நிறுவைகள் சட்டத்தின் கீழ், உபகரணங்கள் கைப்பற்றப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென, திருகோணமலை மாவட்ட செயலக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைப்பிரிவு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .