2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வருடாந்த பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 


- தீசான் அஹமட்

மூதூர் பாரதி பெண்கள் நலன்புரி சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும், கடந்த சனிக்கிழமை (06), பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. 

புதிய நிர்வாக சபையின் தலைவியாக சந்திரசேகரம் வனிதாவும் செயலாளராக சிவலிங்கம் ஜீவராணியும் பொருளாளராக நடேஸ் கலைமகளும் நியமிக்கப்பட்டனர். 

"போரினால் பாதிக்கப்பட்டுக் குடும்பத்தலைவனை இழந்து தவிக்கும் குடும்பங்கள் பல எமது பிரதேசத்தில் உள்ளது. பெற்றோரை இழந்து, பாடசாலைக்குச் செல்வதற்குக் கூட வழியில்லாத பல பிள்ளைகள் நம்மவர் மத்தியில் உள்ளனர். 
அவர்கள் தொடர்பில் எமது சங்கத்தினால் எதிர்காலத்தில் கவனஞ் செலுத்தப்படுவதுடன், அவர்களுக்கான நிவாரணங்களையும் உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கு இச்சங்கம் நடவடிக்கையெடுக்கும்," எனப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட சங்கத்தின் தலைவி சந்திரசேகரம் வனிதா தெரிவித்தார். 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .