2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வர்த்தகர்கள் 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Thipaan   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை நகரிலுள்ள ஹோட்டல், பலசரக்கு கடைகள் என்பவற்றில் திருகோணமலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளால், நேற்றுப் புதன்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சட்டவிதிமுறைகளை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட  வர்த்தகர்கள் 10 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, குறித்த அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலைகளுக்கு மேலதிகமாக பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை வர்த்தக நிலையங்களில் வைத்திருந்தமை, பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் இவ் வர்த்தகர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X