2026 மார்ச் 19, வியாழக்கிழமை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீபச் சுடர் ஏந்தி போராட்டம்

தீஷான் அஹமட்   / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று(30) திருகோணமலை சிவன் கோயிலுக்கு முன்னால் அமைதியான முறையில் போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தை திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு தெரிவித்தும், யுத்தத்தில் உயிர் இழந்தவர்களுக்கு சுடர் ஏந்தியும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இவ் அமைதிவழி போராட்டத்தில் திருகோணமலை, சம்பூர், கிளிவெட்டி போன்ற பல்வேறு இடங்களைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவிக்கும் போது,

 யுத்தம் முடிவடைந்து தற்போது அமைதியான சூழ் நிலை நிலவி வரும் நேரத்தில், இன்னும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யுமாறும் ,உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்கம் வாழ்வாதார உதவிகளை செய்து தர நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X