Niroshini / 2016 ஜனவரி 21 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவன் திஸாநாயக்க புதன்கிழமை (20)உத்தவிட்டார்.
வென்ராசன்புர, கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த சமன் ஹேரத் (வயது 42) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கெதிராக கந்தளாய் மற்றும் மூதூர் நீதிமன்றங்களில் பல திருட்டு வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், சந்தேக நபர் பல வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காததால், குறித்த சந்தேக நபரை செவ்வாய்க்கிழமை(19)மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க உத்தரவிட்டார். ள்.
11 minute ago
20 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
32 minute ago
1 hours ago