Princiya Dixci / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை நீதிமன்றில் வழக்கொன்றின் போது ஆள்மாரட்டம் செய்து நீதிவான் முன்னிலையில் கூட்டில் நின்ற சந்தேகநபரை, எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
ஈச்சந்தீவு, கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், சாராயம் காய்ச்சி விற்பனை செய்தமை, தம்வசம் வைத்திருந்தமை போன்ற வழக்கொன்றில் நீதிமன்றுக்குச் சமுகமளிக்காமல் வேறு ஒரு நபரை அனுப்பியுள்ளார்.
ஆள்மாறாட்டத்துக்கு வந்தவர், நீதிவான் முன்னிலையில் ஆஜராகிய போது, சந்தேகநபரை அடையாளம் கண்ட பொலிஸார், குறித்த வழக்கின் நபர் இவரில்லை என நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்தே, சாட்சிக் கூண்டில் ஏறிய சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
14 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
1 hours ago