2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வாகனத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Editorial   / 2020 ஜூன் 22 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிண்ணியா பிரதேச சபை   தவிசாளரின் வீட்டுக்கு முன்னாலுள்ள மகாத் நகர் பிரதான வீதியின் நடுவில் மூன்று நாள்களாக தரித்துநிற்கும் டிப்பர்  வாகனத்தால், அவ்வீதியால் போக்குவரத்துச் செய்யும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக, விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், இவ் வீதியினூடாக இரவு வேளைகளில்  பிரயாணம் செய்யும் மக்கள் விபத்துக்கு உள்ளாக நேரிடுவதாகவும்,  போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும்   மக்கள் தெரிவிக்கின்றனர்.

பழுதடைந்த நிலையிலுள்ள மேற்படி டிப்பரின் உரிமையாளர், வாகனத்தை ஓரமாக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, வீதியிலிருந்து குறித்த வாகனத்தை அகற்றுவதற்கு வாகன உரிமையாளரும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு , பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X