2025 மே 14, புதன்கிழமை

வான்எலவில் கைக்குண்டுகள் மீட்பு

தீஷான் அஹமட்   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வான் ஆற்றிலிருந்து M60 ரக மோட்டார் குண்டுகள் 4 மீட்கப்பட்டனவென, வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.

வான் ஆற்றுப் பகுதியில் நேற்று (08) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் மோட்டார் குண்டொன்று சிக்கியுள்ளது.

இது சம்மந்தமாக குறித்த மீனவர், வான்எல பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, குறித்த ஆற்றுப் பகுதியில் பொலிஸார் தேடுதல் நடத்திய போது, மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கந்தளாய் நீதவான் நீதிமன்ற அனுமதியை பெற்று, சூரியபுர விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன், இந்த 4 மோட்டார் குண்டுகளையும், இன்று (09) செயழிழக்கச் செய்யவுள்ளதாக, வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .