2025 மே 12, திங்கட்கிழமை

வாராந்த சந்தைகளுக்குத் தடை

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகர் பிரதேசம், புல்மோட்டை, சீனக்குடா, 5ஆம் கட்டை, தம்பலகாமம் போன்ற இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இதனையடுத்து, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில், வாராந்த சந்தை முடக்கப்பட்டுள்ளதோடு, வர்த்தக நிலையங்கள், நுகர்வோர்களின் மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், எதிர்வரும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை இடம்பெறும் வாராந்த சந்தை, ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி  அறிவித்துள்ளார்.  

வர்த்தகர்கள் தங்களது வியாபார நிலையங்களில் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அத்தியவசியப் பொருட்களைக் கொள்வளவு செய்வதற்கு ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மாத்திரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வெளியில் வரவேண்டுமெனவும் கிண்ணியா பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X