எப். முபாரக் / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழைக் குலைகளைத் திருட முயற்சித்த ஒருவரை நாய் கடித்துக் குதறியதில் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வான்எல, ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரே நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளார்.குறித்த நபர் நேற்றிரவு (24) வாழைத்தோட்டமொன்றில் வாழைக்குலைகளைத் திருடுவதற்கு முயன்ற வேளையில், நாய் கடித்துக் குதறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .