Editorial / 2020 மே 22 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள விகாரையொன்றின் கணினி, பணம் ஆகியன திருடப்பட்டுள்ளதாக, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைபாட்டை, கந்தளாய், 94ஆம் கட்டை - சைலாறாம விகாரையின் விகாராதிபதி அஸ்கிரிய புஞ்யரத்ன தேரர், இன்று (22) பதிவு செய்துள்ளார்.
விகாரையின் கூரை மேல் ஏறி, ஒரு இலட்சத்து 23,000 ரூபாய் பணத்தையும் மடிக்கணினி ஒன்றையும் திருடிச் சென்றுள்ளதாக, 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அழைப்பு விடுத்து, தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, குறித்த இடத்தை பகுப்பாய்வு செய்யும் நோக்கில் அடையாளங்களை மேற்கொண்டுள்ளனர்.
9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025