2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

விசேட சுத்திகரிப்பு பணி

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை நகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் சபை ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், கடந்த வாரம் மனையாவெளியில் இடம்பெற்ற வட்டார ரீதியான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டத்துக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து,  அதன் இரண்டாம் கட்டமாக இன்று (24) வில்லூண்டி வட்டாரத்தில், விசேட சுத்திகரிப்பு பணிகள் இடம்பெற்றன.

இந்த விசேட பணியில், தலைவர் நாகராஜா இராஜநாயகம் மற்றும் உப தலைவர் சே.சிறீஸ்கந்தராஜா உட்பட சபையின் ஏனைய உறுப்பினர்கள் செயலாளர், பொது சுகாதார பரிசோதகர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X