Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் விடுமுறை பெற்றுக்கொள்ளும் போது, சபைகளின் தவிசாளர்களுக்குத் தெரியப்படுத்தி விடுமுறைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளருக்கு இன்று (02) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, பணிப்புரை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல், அண்மையில் நடைபெற்றது.
இதன்போது, சபையின் செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் விடுமுறை பெற்றுக்கொள்ளும் போது தங்களுக்குத் தெரியப்படுத்துவதில்லை எனவும் அதனால் தாங்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதனையடுத்தே, எதிர்காலத்தில் செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் விடுமுறை பெற்றுக்கொள்ளும் போது, குறித்த சபைகளின் தவிசாளர்களுக்குத் தெரியப்படுத்தி, முன் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago