Princiya Dixci / 2021 ஜனவரி 28 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி நடத்தி வந்த நான்கு பேரையும், பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, இன்று (28) உத்தரவிட்டார்.
கல்கமுவ, தம்புள்ளை மற்றும் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 31, 34 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்களும் ஆணொருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், திருகோணமலை - மத்திய வீதிப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் எதிரே மஜாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதி நடத்துவதாக திருகோணமலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
9 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
37 minute ago