2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இளைஞன் மரணம்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 நவம்பர் 01 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை (லங்கா பட்டினம்) முகத்துவாரம் பிரதான வீதியில் உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன், நேற்று (31) மாலை உயிரிழந்துள்ளாரென, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், சேனையூர், மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த துறைநாயகம் தசீதன்  (17 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிச்சேனையிலிருந்து லங்காபட்டினம் வீதி ஊடாக தனது அக்காவை ஏற்றிக்கொண்டு பிறந்தநாள் வீடொன்றுக்குச் சென்ற வேளை, உழவு இயந்திரத்தில் மோதியதால் அக்கா மற்றும் தம்பி படுகாயமடைந்த நிலையில், சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி  இளைஞன் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய  உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சேருநுவர பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X