எப். முபாரக் / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வான் ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், சிறுவன் ஒருவன் உட்பட ஐவர் காயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து, இன்று(20) அதிகாலை கந்தளாய் - குளக்கட்டின் வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு, குரு
கொழும்பிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற காரும், கந்தளாயில் இருந்து குருநாகலைக்குச் சென்ற வானும் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, வானில் பயணம் செய்த மூவரும், காரில் பயணம் செய்த இருவருமே காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .