Suganthini Ratnam / 2017 ஜூலை 10 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா, குட்டிக்கராச் கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
குட்டிக்கராச்சைச் சேர்ந்த முபாரக் முஹம்மது றினாஸ் (வயது 26) என்பவரே பலியாகியுள்ளார்.
இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளானது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் ஓரத்தில் காணப்படும் தூணுடன் மோதி ஞாயிற்றுக்கிழமை (9) இரவு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Mar 2026