அப்துல்சலாம் யாசீம் / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
கெப்பிட்டிக்கொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சமாதிகம சந்தியில், நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கெப்பிட்டிக்கொல்லாவ - கஹட்ட கொல்லாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே, உயிரிழந்துள்ளதாக, கெப்பிட்டிக்கொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கெப்பிட்டிக்கொல்லாவ நோக்கிப் பயணித்திக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றுடன், டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர், ஸ்தலித்தலியே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை, கெப்பிட்டிக்கொல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .