அப்துல்சலாம் யாசீம் / 2018 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, தோப்பூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் நேற்று முன்தினம் (09) மாலை சமுர்த்தி உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிளிவெட்டி மேம்காமம் பகுதியைச்சேர்ந்த கே.வரதராஜன் (வயது 51) எனவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சம்பூர் பகுதிக்கு சென்று வீடு திரும்பும் போது விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்தவர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
17 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
3 hours ago