2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்

ஏ.எம்.ஏ.பரீத்   / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை,  கிண்ணியா ஆயிலியடி வீதிக்குச் செல்லும் , சூரங்கல் பிரதான  வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் படு காயமடைந்தனர்.

இச்சம்பவம், சூரங்கல் நெல் களஞ்சிய சாலைக்கு முன்பாக நேற்று  (05) மாலை இடம்பெற்றதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர், மனைவி, 03 மாத கைக் குழந்தையுமாவர்.

இவர்கள் உடனடியாக கிண்ணியா தள வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிஅனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X