2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

விபத்தில் கடற்படை வீரர் பலி

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

திருகோணமலை, தம்பலகாமம், 99ஆம் கட்டை சந்தியில், இன்று (30) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர், சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளாரென,  தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், சம்பூர் கடற்படை முகாமில் படை வீரராகப் பணிபுரியும் விக்கிரம திலக (வயது-31) என்பவராவர்.

இவர், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த உழவு இயந்திரத்தில் நேருக்கு நேர் மோதிண்டதில் உயிரிழந்துள்ளாரென,  பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X