எப். முபாரக் / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில் இன்று (14) காலை 10 மணியளவில் முச்சக்கர வண்டிகள் இரண்டு, ஒன்றொடு ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலத்த காயங்களுடன், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
மனையாவெளி, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 47, 55, 39, 25 வயதுடைய ஆண்கள் இருவரும், பெண்கள் இருவருமே, விபத்தில் காயமடைந்துள்ளனர்.
திருகோணமலை வைத்தியசாலை வீதியில் வேகமாகச் சென்று திரும்புகையிலே இரண்டு முச்சக்கர வண்டிகளும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்த திருகோணமலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .