Freelancer / 2022 ஜூன் 28 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை ஹபரன பிரதான வீதியின் கித்துல் ஊற்று என்னுமிடத்தில், கடற்படையினர் சென்ற கெப் வாகானம் டிப்பருடன் மோதியதில் மூன்று கடற்படை வீரர்கள் படுகாயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கற்படை கெப் வாகானம் கொழும்பிலிருந்து- திருகோணமலை நோக்கி சென்ற வேளையில், கந்தளாய் கித்துல் ஊற்று என்னுமிடத்தில் முன்னால் சென்ற டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த கடற்படை வீரர் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

29 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
21 Dec 2025