2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபருக்கு பிணை

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர், சம்பூர் பிரதேசத்தில் மோட்டர்  சைக்கிள் மூலம் பாதசாரி ஒருவரை மோதி, காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில்  விடுதலை செய்யப்பட்டார்.

சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சந்தேக நபரை, சம்பூர் பொலிஸார் நேற்று முன்தினம் (26)  மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, நீதவான் ஐ.எம். றிஸ்வான் இந்த தீர்ப்பினை வழங்கினார்.

குறித்த சந்தேக நபரை அடுத்த மாதம் 26 ஆம் திகதி, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X