2026 மார்ச் 19, வியாழக்கிழமை

விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதி கோரி, திருகோணமலை வளாக சமூகத்தினர், நாளை (28) நண்பகல் 12 மணியளவில், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

 

விரிவுரையாளரின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, சமூகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இனிவரும் காலங்களில் தடுப்பதற்கான ஒரு விழிப்புணர்வுப் போராட்டமாக இது அமையுவுள்ளது.

இப்போராட்டத்தில், கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளர்கள், மாணவர்களெனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X