அப்துல்சலாம் யாசீம் / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர், நீரில் மூழ்கியமையாலேயே மரணித்துள்ளார் என்றும், உடலில் எதுவிதக் காயங்களும் காணப்படவில்லையெனவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் யூ.மயூரதன் அறிவித்துள்ளார்.
திருகோணமலை, நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்கவால், பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு, பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதேவேளை, உறவினர்களுக்கு விருப்பமான இடத்துக்கு சடலத்தை எடுத்துச் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டதையடுத்து, உறவினர்கள், யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதாக, நீதவான் முன்னிலையில் தெரிவித்தனர் .
இதனையடுத்து, நேற்று முன்தினம் (22), திருகோணமலை பொது வைத்தியசாலையிலிருந்து சடலத்தைக் கொண்டு சென்றனர்.
சடலத்தை, நேற்று முன்தினம் மாலை யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் யூ. மயூரதன், பிரேத பரிசோதனைக்குட்படுத்தியதுடன், உடம்பில் எதுவிதக் காயங்களுமில்லை எனவும், நீரில் மூழ்கியமையாலேயே மரணம் நேர்ந்துள்ளதெனவும், பிரேத பரிசோதனையை அடுத்துத் தெரிவித்தார்.
இதனையடுத்து, கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொடர்பாடல் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் விரிவுரையாளர் நடராசா போதநாயகியின் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சடலம், வவுனியாவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதெனவும், உறவினர்கள் தெரிவித்தனர்.
6 minute ago
15 minute ago
42 minute ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
42 minute ago
20 Dec 2025