Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
விவசாய உற்பத்தியாளர்கள், தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமல் நட்டப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்காமல் உற்பத்தியை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு அரசாங்கம் கூறுவது நியாயமற்றது என, மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, விவசாயிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதிலும், விற்பனை செய்வதிலும் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
அந்தவகையில் மரக்கறி, பழவகை, பூக்கள் என்பவற்றை தமது வாழ்வாதாரத்துக்காக உற்பத்தி செய்துவரும் விவசாயிகள் தமது வாழ்வாதாரம் இழக்கப்பட்டும், தமது உற்பத்தி நடவடிக்கைகளை தொடர முடியாத நிலைக்கும் தள்ளப்படுகின்றார்கள்.
இந்நிலையில், அரசாங்கம் விவசாயிகளை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கோருவது நியாயமற்றதாகும்.
எனவே, விவசாயிகளின் உற்பத்திகளை, விவசாய திணைக்களங்களின் ஊடாக கிராம மட்டங்களில் கொள்வனவு செய்து தேவையான பிரதேசங்களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வதோடு, சந்தைப்படுத்த முடியாத அல்லது மேலதிகமான உற்பத்திகளில் இருந்து வத்தல், ஊறுகாய், பழச்சாறு, பழப்பாகு, பூக்களில் இருந்து பொடி என்பவற்றை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
6 hours ago
8 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 Sep 2025