2025 மே 02, வெள்ளிக்கிழமை

வீடுகளில் கொள்ளை; நால்வருக்கு விளக்கமறியல்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை மாவட்டத்தில் மூன்று பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளை உடைத்துக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நால்வரை, செப்டெம்பர் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு நேற்று (25) உத்தரவிட்டார்.

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையம், உப்புவெளி பொலிஸ் நிலையம், நிலாவெளி பொலிஸ் நிலையம்  ஆகிய பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு, ஓட்டோவில் சென்றே கொள்ளைச் சம்பவங்களை சந்தேகநபர்கள் மேற்கொண்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, சந்தேகத்தின் பேரில் மேற்படி நால்வரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது, கொள்ளையடித்த உபகரணங்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் 06 முறைப்பாடுகளும், உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் 05 முறைப்பாடுகளும், நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் 03 முறைப்பாடுகளும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பதிவாகியுள்ளதாகவும், நீதவான் முன்னிலையில் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .