Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
பொன் ஆனந்தம் / 2017 ஜூலை 21 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதுார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சீதனவெளி - பாட்டாளிபுரம் ஆகிய கிராமங்களுக்கு இடையிலான 5 கிலோமீற்றர் நெடுஞ்சாலையின் பணிகளைத் துரிதப்படுத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீண்டகாலமாகக் கைவிடப்பட்டிருந்த இப்பிரதான வீதிப்பணி, நாடாளுமன்ற உறுப்பினர், நெடுஞ்சாலைகள் அமைச்சுடன் தொடர்பு கொண்டுக்கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்தப்பணி தற்சமயம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆயினும், அதன்பணியைத் துரிதப்படுத்துமாறு, அப்பணிகளை நேரடியாகச்சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
கடந்த இருவருடங்களுக்கு முன்னர் இப்பிரதான வீதி செப்பனிடப்படத் திட்டமிட்டபோதும், அதுபின்னர் கைவிடப்பட்டிருந்தது.
இதனால் இப்பிரதேசத்தில் உள்ள பாட்டாளிபுரம், வீரமாநகர், இளக்கந்தை, நல்லுார், மலைமுந்தல் நீலாக்கேணி போன்ற வறிய மக்கள் வாழும் கிராம மக்கள் பெரும் அசேளகரியங்களுக்குள்ளாகினர். பஸ்போக்குவரத்தும் தடைப்பட்டது. இந்நிலையில் இப்பணி தற்சமயம் நடைபெறும் நிலையிலேயே அதைத் துரிதமாக்குமாறு அவர் கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago