2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வீதியில் அடாவடி; நால்வர் கைது

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

திருகோணமலை, சீனக்குடா பகுதியில், வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் நேற்று (07) இரவு நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 35 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே மது அருந்தி விட்டு, வீதியால்  சென்றுகொண்டிருந்த  வாகனங்களை நிறுத்தி,  தாக்குதல் நடத்தியதாகவும்  இதனால்  அரச  போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ், தனியார் பஸ், வான், ஓட்டோ  ஆகியன சேதமாக்கப்பட்டள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அதேவேளை, தாக்குதலில் காயமடைந்த ஐவர், தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X