2025 ஜூலை 05, சனிக்கிழமை

வெடிபொருட்களுடன் இளைஞன் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 16 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஈ.பரீத், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, இறக்கக்கண்டி பிரதேசத்தில் நேற்று (15)) இரவு  மேற்கொண்ட  சுற்றி வளைப்பில், வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றஞ்சாட்டின் பேரில், இளைஞன் ஒருவன் திருகோணமலை பிராந்திய நச்சுத்தன்மையான போதைப் பொருள்  ஒழிப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், இறக்கக்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் என, அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து சட்டவிரோத மீன்பிடிக்காகப் பயன்படுத்தப்படும் 32 துண்டுகளைக் கொண்ட 4 கிலோவும் 640 கிராமும் ஜெயலக்னைட் வெடி மருந்துகள் மீட்கப்பட்டன. 

 இது தொடர்பில் தங்களுக்குக் கிடைத்த தகவல் ஒன்றில் பேரிலேயே, இச் சுற்றி வளைப்பை மேற்கொண்டு,  இவரை கைது செய்ததாகவும், மேலதிக விசாரணைக்காக  குச்சவெளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் போதைப் பொருள்   தடுப்பு பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. விஜயசிங்க  தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .