Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்
வெள்ள அனர்த்ததால் பாதிக்கப்பட்டு, நலன்புரி முகாம்களில் தங்கி வாழும் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் வட்டவான், மாவடிச்சேனை, சேனையூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 208 குடும்பங்களுக்கு, திருகோணமலை கனடா நலன்புரிச் சங்கத்தின் உதவியுடன், அத்தியாவசிய நிவாரணப் பொருள்கள், நேற்று (25) வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டத் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன், வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம், தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் நிருவாகச் செயலாளர் சி.தர்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வெருகல், நாதன்ஓடை உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மேற்படி 208 குடும்பங்களும் இடம்பெயர்ந்து, வெருகலிலுள்ள மாவடிச்சேனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, வட்டவான் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் போன்றவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .